பிறந்த நாள் பரிசு வழக்கை தள்ளி வைக்க கோரிய ஜெ. மனு தள்ளுபடி
சென்னை தனக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த ரூ. 2 கோடி தொடர்பான வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை சிபிஐ கோர்ட்தள்ளுபடி செய்து விட்டது.
1991 ம் ஆண்டில் இருந்து 96 ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக பணியாற்றினார். 1992 ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள 57 வங்கி டிமாண்ட் டிராப்டுகள் அவருக்கு பரிசாக வந்தன என்றும், அந்த பணத்தை அரசு கஜானாவில் செலுத்தாமல் தனது வங்கி கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்தார் என்று புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி முகமது இசாத் அலி விசாரித்து வருகிறார். ஜெயலலிதா உள்பட 3 பேரும் இந்த வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறார்கள் என்றும், ஆகவே, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய நாள் குறிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி அன்று மனுதாக்கல் செய்தார்.
இந்தப் பின்னணியில்இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை இன்று நடந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்ல் மேல் முறையீடு செய்ய விருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் தர சிபிஐ மறுப்பு தெரிவித்தது. மேலும், மனுவை தள்ளுபடி செய்து வாதத்தை முடிக்க உத்தரவிட்டது.
அதேபோல, செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு ஆகியோரின் வாதத்தையும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய அழகு திருநாவுக்கரசு சமீபத்தில்தான் திமுகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications