காங்கிரஸ் பெண் பிரமுகரை கொன்ற அக்காள் மகன்கள்!
சென்னை: நிலத்தகராறில் காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த அவரது அக்காள் மகன்கள் 3 பேரும், மதிமுக இளைஞரணி பிரமுகரும் தலைமறைவாகிவிட்டனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசனின் மனைவி வரலட்சுமி (41). காங்கிரஸ் பிரமுகரான இவர் கந்து வட்டி தொழில் செய்து வந்தார்.
மேலும் அப் பகுதியில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு பெண் தாதாவாக வலம் வந்தார். நேற்றிரவு வீட்டில் மகள் சாமுண்டீசுவரி மற்றும் நண்பர் பாலு ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து வரலட்சுமியை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இதைத் தடுத்த பாலுவுக்கும் கையில் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து வரலட்சுமியின் மகள் சாமுண்டீசுவரி கொடுத்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வரலட்சுமிக்கும் அவரது அக்கா கலாவுக்கும் 2 சென்ட் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது.
இதனால் வரலட்சுமி மீது அவரது அக்காள் மகன்களான சுரேஷ், சுபாஷ், சுகுமாரன் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்தனர்.
மேலும் தாம்பரம் மதிமுக இளைஞர் அணி அமைப்பாளர் வேலு பிரபாகரன் என்பவருக்கும் வரலட்சுமிக்கும் இடையிலும் நிலம் தொடர்பாக பிரச்சனை உள்ளது.
இந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று வேலு நீதிமன்றம் சென்றபோது அங்கு வந்த வரலட்சுமிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வேலு பிரபாகரன், சுரேஷ், சுபாஷ், சுகுமாரன், மற்றொரு நபர் ஆகியோர் சேர்ந்து வரலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகிவிட்ட இந்த ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications