தென் சென்னை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவருக்கு அரிவாள் வெட்டு
சென்னை: தென் சென்னை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவரை ஒரு கும்பல் அரிவாள்களால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தென் சென்னை மாவட்டத் தலைவராக சமீபததில் நியமிக்கப்பட்டவர் செளந்தராஜன் (54).
இவர் சென்னை பெருங்குடி திருமலை அலெக்ஸ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியிலேயே இவரது அலுவலகமும் உள்ளது.
நேற்றிரவு தனது அலுவலகத்தில் இருந்த செளந்தர்ராஜனை 6 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள்களால் பயங்கரமாகத் தாக்கியது. இதில் அவரது கை, கால்களில் வெட்டு விழுந்தது.
இதைத் தடுக்க முயன்ற அவரது அலுவலக உதவியாளர் கணேசன் (35) என்பவரையும் அந்தக் கும்பல் வெட்டியது.
இதில் படுகாயமடைந்த இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்.
செளந்தர்ராஜனின் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிய காட்சி அதில் பதிவாகியுள்ளது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.
வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து செளந்தர்ராஜனை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
சமீபத்தில் வணிகர் சங்கப் பேரவை இரண்டாக பிளவுபட்டு இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications