கைதைத் தவிர்க்க மதானி திணறல்-சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
கொல்லம்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரான அப்துல் நாசர் மதானி இன்றே கைது செய்யப்படக் கூடும் என தெரிகிறது. ஆனால் கைதைத் தவிர்க்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.
கொல்லம் வந்து முகாமிட்டுள்ள கர்நாடக போலீஸ் படையினர் மதானியை இன்று கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப கொல்லம் அன்வர்சேரியில் மதானியின் வீடு உள்ள பகுதியைச் சுற்றிலும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக பெங்களூரிலிருந்து வந்துள்ள தனிப்படையினர் கொல்லத்திலேயே தங்கியுள்ளனர். குடியரசுத் தலைவர் கேரளாவுக்கு வந்துள்ளதால் மதானியைக் கைது செய்வதை தள்ளி வைத்து குடியரசுத் தலைவர் கிளம்பிச் செல்வதற்காக காத்துள்ளனர்.
இந்த நிலையில் கைதைத் தவிர்க்க சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார் மதானி. முன்ஜாமீன் கோரி அவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதானி வீட்டைச் சுற்றிலும் குவிந்துள்ள அவரது ஆதரவாளர்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் விரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
மைனாகப்பள்ளி, சாஸ்தாகோட்டை பஞ்சாயத்துக்களில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. ஹர்ஷிதா அட்டல்லுரி தலைமையில் போலீஸ் படையினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மதானி இன்று இரவுக்குள் கைது செய்யப்படக் கூடும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவரைக் கைது செய்வதை யாரேனும் தடுத்தால் அவர்களையும் கைது செய்ய கேரள போலீஸார் தயாராக உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications