தமிழீழம் மலர்ந்தே தீரும், தமிழர் சிந்திய ரத்தம் வீண் போகாது-வைகோ
நெல்லை: 1989ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்தேன். மீண்டும் அவரை சந்திப்பேன். தமிழீழம் மலர்ந்தே தீரும். இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
நெல்லை, பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் ஓவியர் புகழேந்தியின் போர் முகங்கள் என்ற இலங்கைப் போரில் தமிழர்களின் பாதிப்புகள் குறித்த ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இதை வைகோ தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து எனது பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட இங்கே ஓவியர் புகழேந்தி வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆயிரம் மடங்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கை போர் நிகழ்வுகள் குறித்த இந்த ஓவியங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஒளி நாடாக்களாகவும், புத்தகங்களாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் வீடுகள் தோறும் இடம்பெற வேண்டும்.
தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழத்தை உருவாக்க இந்த ஓவியக் கண்காட்சி பயன்படும். இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது. 1989-ல் பிரபாகரனை சந்தித்தேன். மீண்டும் சந்திப்பேன்.
காலம் கடந்தாலும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. இலங்கை அதிபர் ராஜபக்சே தப்ப முடியாது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது இங்குள்ள சிங்களவர்களுக்கு என்ன பாதுகாப்பு? இதைத்தான் சீமான் கூறினார். இங்கே கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எந்த அடக்குமுறைக்கு நாங்கள் அடங்க மாட்டோம் என்றார் வைகோ.
நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மறைமுகமான அடக்குமுறை நிகழ்ந்து வருகிறது. இதை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications