வேடிக்கை பார்க்கக் கூடாது, திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார். வழக்கம் போல திமுகவை மறைமுகமாகவும், சற்று நேரடியாகவும் வாரிப் பேசினார். கடுமையாகவும் விமர்சித்தார்.
அவர் பேசுகையில், என்னுடைய பேச்சு என்பது சர்ச்சையை எழுப்ப வேண்டும். அப்போதுதான் சர்ச்சை விவாதமாகும். விவாதம் தீர்வாகும்.
43 ஆண்டுகளாக தமிழகத்தை காங்கிரஸ் ஆள முடியவில்லை. திராவிட இயக்கங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன. திராவிட கட்சிகள்தான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தியே போராட்டங்கள்-பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆட்சிக்கு வருகின்றன.
நாம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கோவையில் அதிமுக ஒரு கூட்டத்தை காட்டியது. பதிலுக்கு திமுகவும் ஒரு கூட்டத்தை காட்டியது. இதைப்பார்த்து அதிமுக மீண்டும் ஒரு கூட்டத்தை காட்டியது.
டென்னிஸ் விளையாட்டு போல அடித்த பந்தை திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறோம். திருப்பி அடிக்கவில்லை. நாமும் திருப்பி அடித்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும்.
திராவிட இயக்கங்களின் பணி சிறப்பாக உள்ளது. நான் அவர்களை குறை சொல்லவில்லை. நாம் ஏன் அவர்களை போல செயல்படக்கூடாது. தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டணி வைத்து சீட்டு வாங்கிக்கொண்டு, நாம் உழைத்து அவர்களை ஜெயிக்க வைக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதில்லை. நான் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் விளம்பரம், அறிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் பேசுவதோடு மட்டும் நின்று விடக் கூடாது.
மத்திய அரசின் சாதனைகளை நாம் பேசவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் திராவிட கட்சிகள் பேசி பேர் வாங்கிக் கொண்டிருக்கின்றன. நான் பேசினாலும் தடை போட்டுவிடுவார்கள்.
தமிழகத்தில் உள்ள 600 புதிய பேருந்துகள் ஜவஹர்லால் நேரு பெயரில் இயங்குகிறது. ஆனால் வேறு ஒரு நேரு இந்தப் பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் கார்த்தி.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications