பதவி விலக வேண்டாம்!-ரத்தன் டாடாவுக்கு பங்குதாரர்கள் கோரிக்கை
மும்பை: டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகக் கூடாது என்று டாடா நிறுவனப் பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை பதவி விலகினாலும், கவுரவ தலைவராகத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
வரும் டிசம்பர் 2012-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தனது தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்குள் அவரது இடத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி ஆரம்பித்துள்ளது.
தனக்குப் பிறகு தலைவர் பதவிக்கு வரும் நபர் முற்றிலும் தகுதி வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.
இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ரத்தன் டாடா பதவி விலகக் கூடாது என்று கோரியுள்ளனர்.
"டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து தாங்கள் விலகக் கூடாது என்பதே எங்கள் ஒருமித்த கோரிக்கை. ஒருவேளை தாங்கள் விலகுவதாக இருந்தாலும். டாடா குழுமத்தின் கவுரவத் தலைவராக தொடர வேண்டும். முக்கிய பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும்.
டாடா குழுமத்துக்கு தங்களின் பங்களிப்பு அசாதாரணமானது. உலகின் 10வது பெரிய ஸ்டீல் நிறுவனமாக டாடா ஸ்டீலை உருவாக்கிய பெருமை உங்களுக்கே உரியது..." என்று பங்குதாரர்கள் கூறினர்.
பின்னர் டாடா கூறுகையில், "தலைவர் பதவிக்கான பொருத்தமான நபர் தேர்வு குறித்து இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். டாடா ஸ்டீலைப் பொறுத்த வரை, கோரஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது உலகில் பெரிய நிறுவனங்களுள் டாடா ஸ்டீலும் ஒன்றாக மாற உதவியது...," என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications