மின் தடையால் கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிகள் பாதிப்பு-அரசு ஊழியர் சங்கம் புகார்
மதுரை: அறிவிக்கப்படாத மின்தடையால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் கு.பாலசுப்ரமணியம் கூறுகையில், பல அரசு அலுவலகங்களில் திடீர் திடீரென மின் தடை ஏற்படுவதால் டேட்டா என்ட்ரி பணிகள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும், உரிய யுபிஎஸ் வசதி செய்து தரப்படாததாலும் டேட்டாக்களைப் பதிவு செய்யும் பணி பெரும் சிரமத்திற்குள்ளாகிறது.
இந்த அறிவிக்கப்படாத மின் தடை காரணமாக கம்ப்யூட்டர்மயமாக்கப் பணிக்குப் பெரும் குந்தகம் ஏற்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல 30,000 டாஸ்மாக் ஊழியர்களின் பணியை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட மேலவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு இட ஒதுக்கீடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications