வியாபாரிகள் போராட்டம் எதிரொலி-சென்னையில் 4 ரவுடிகள் கைது
சென்னை: சென்னை புளியந்தோப்புப் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து நான்கு ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். ரவுடிகளின் தலைவன் போல செயல்பட்டு வரும் பிரபல ரவுடி அப்புவை வலை வீசி தேடி வருகின்றனர்.
புளியந்தோப்பு பகுதியில் கடைகளில் ரவுடிக்கும்பல் மாமூல் கேட்டு மிரட்டி வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ள மாரிமுத்து, கார்த்திகேயன் ஆகியோரை, பிரபல ரவுடியான அப்பு கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது.
பணம் கொடுக்க மறுத்த வியாபாரிகளை அப்பு தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த ரவுடியைக் கைது செய்ய கோரி, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து அப்பு மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரது மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் இவர்களை தேடி வந்தார்.
இந்த நிலையில் அப்புவின் கூட்டாளிகளான ரவுடிகள் பிரகாஷ், ஜானி, கார்த்திகேயன், நரசிம்மன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பு தலைமறைவாக உள்ளான். அவனைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications