வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்: பொதுமக்கள் முற்றுகை
பணகுடி: செட்டிகுளம் பாண்டியன் கிராம வங்கியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதால் அப்பகுதி மக்கள் நேற்று வங்கியை முற்றுகையிட்டனர்.
கூடன்குளம் அருகே செட்டிகுளத்தில் பாண்டியன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் விவசாயம் சார்ந்த நகை கடன் வழங்கப்படுவதால் வேலை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்கு சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 3236 பேர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
கடந்த 13-ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வங்கியில் வைத்த நகையை திருப்ப சென்றுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் சங்கரகுமார் லாக்கருக்கு சென்றபோது நகைகள் இல்லாததால் திடுக்கிட்டார். அவர் திரும்ப வந்து கம்யூட்டர் பழுதானதால் இன்னும் ஒரு வாரத்தில் நகையைத் தருவதாக கூறி அப்பெண்ணை சமாளித்து அனுப்பி வைத்தார்.
பின்னர் சங்கரகுமார் இது குறித்து உடனடியாக விருதுநகரில் உள்ள மண்டல அலுவலத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து வந்த அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் இருவர் வங்கியில் நகையை திருப்ப முயன்றனர்.
அப்போதும் மேலாளர் தரப்பில் கம்யூட்டர் பழுது என்று பதில் தரப்பட்டதால் அவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த தகவல் வெளியே கசிந்ததால் கூட்டப்புளி, பெருமணல், இருக்கன்துறை, புதுமனையைச் சேர்ந்த சுமார் 200 பேர் வங்கி முன் திரண்டனர்.
தங்கள் நகைகளைத் திருப்பி தரக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மண்டல மேலாளர் நெடுஞ்செழியன் தணிக்கை பணிகளை கண்காணித்தார். அடகு வைக்கப்பட்ட நகைகளில் 20 பாக்கெட் மட்டுமே காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என தெரிகிறது. நகை வைத்திருந்த பாக்கெட் காணாமல் போனது எப்படி என்பது குறித்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications