வரிகளைக் குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த்
சென்னை:பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விலைவாசி உயர்வால் ஏற்கனவே அவதிப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களின் மீது இந்தியாவிலேயே அதிகபட்ச வரி விதிக்கலாமா?. அண்மையில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசால் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
ஏற்கனவே, விலைவாசி உயர்வாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வாலும் அவதிப்படும் மக்கள் மீது மின் கட்டண உயர்வையும் சுமத்துவதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
முதல்வர் கருணாநிதி, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின் கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.
அதேபோல இதர மாநிலங்களில் பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்?.
பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22-8-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் வாடகை வண்டிகள் நிறுத்தும் இடம் அருகில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.திருப்பதி தலைமையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியை குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications