அரசு நிறுவனங்களில் மெடிக்ளெய்ம் எடுத்திருந்தால் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம்
டெல்லி: அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், அவர்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 449 மருத்துவமனைகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிற நோயாளிகளிடம் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமே காப்பீடு செய்துள்ளவர்களிடமும் வசூலிக்க,சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள முக்கிய மருத்துவமனை நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவக் காப்பீடு செய்துள்ளவர்களிடம் அதிகப்படியான சிகிச்சை கட்டணம் வசூல் செய்து வந்தன. இதனால் அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ. 2000 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே இந்த காப்பீடு நிறுவனங்கள் சிகிச்சை கட்டணங்களை வரைமுறை செய்துள்ளன. மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் திவாலாகிவிடும்.
இன்சூரன்ஸ் செய்யாதவர்களுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 55 ஆயிரம் சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளவர்களிடம் ரூ. 1.45 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 15 ஆயிரம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதிக கட்டண வசூலை அடுத்து அரசுத் துறை காப்பீடு நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இண்டியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா அசூரன்ஸ் ஆகியவை தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தா சிகிச்சை வசதியை கடந்த மாதம் ரத்து செய்தன.
இதை தொடர்ந்து மருத்துவமனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது 449 மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மேலும் பல மருத்துவமனைகளுக்கு நீட்டிக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications