சத்யம் மோசடி-ராமலிங்க ராஜூ ஜாமீனில் விடுதலை!!!

சத்யம் நிறுவனத்தின் துணை நிறுவனமான மேடாஸை சத்யத்துடன் இணைக்க ராஜூ முயன்றபோது அதில் நடந்த நிதி மோசடிகள் அம்பலமாயின.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தை பொய்யாக உயர்த்திக் காட்டி, பங்குகளின் விலை உயரக் காரணமாக இருந்ததாக ராஜூ மீது புகார் எழுந்தது.
இந் நிலையில் ரூ.5,700 கோடிக்கு மேல் பொய்யாகக் கணக்குக் காட்டியதாக ராமலிங்க ராஜு ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராஜு கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சிபிஐ, இதில் ரூ.7,800 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளதாக அறிவித்தது.
இந் நிலையில் சத்யம் நிறுவனத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. பின்னர் அதை மகிந்திரா நிறுவனம் வாங்கிவிட்டது.
இன்னொரு பக்கம் ஜாமீன் பெற ராஜு முயன்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. சில காலம் கழித்து மீண்டும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதற்கிடையே ராமலிங்க ராஜூவுக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஹெபாடிடிஸ் நோய் தாக்குதலும் ஏற்பட்டதால் தனது சிறைவாசத்தின் பெரும் பகுதியை அவர் மருத்துவமனையிலேயே கழித்துவிட்டார்.
இடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்க ராஜூவின் தம்பி ராம ராஜு, சத்யம் முன்னாள் நிதி அலுவலர் வட்லாமணி சீனிவாஸ் உள்பட 9 பேர் பல்வேறு தருணங்களில் ஜாமீன் பெற்று விட்டனர்.
இந் நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் ராமலிங்க ராஜூ. இதையேற்று அவரை ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications