மக்கள் மனதில் மதிமுகவின் அங்கீகாரம் நீடிக்கிறது: வைகோ
சென்னை: தேர்தல் கமிஷனால் மதிமுகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் மனதில் மதிமுகவின் அங்கீகாரம் நீடிக்கிறது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,
மதிமுகவிற்கு கிடைத்துள்ள ஓட்டுக்களில், குறைந்த சதவீதத்தில் தான் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்துள்ளது. ஆனாலும் இன்னும் 6 ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாம் போட்டியிட முடியும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சீமா பஷீர், மணிமாறன், நடராஜன், பூமிநாதன் போன்றவர்கள் மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். அவர்கள் வெற்றி பெற்று, கூடுதலாக சில எம்எல்ஏக்கள் நமக்கு கிடைத்திருந்தால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் எளிதாக கிடைத்திருக்கும். மக்கள் மனதில் மதிமுகவின் அங்கீகாரம் நீடிக்கிறது.
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராக என் பிரசாரம் வலிமையாக இருக்கும். மக்கள் பிரச்சனைகளில் திமுக கவனம் செலுத்தவில்லை. தினமும் ஆடம்பர பகட்டு விழாக்களை நடத்தி, மக்களை எரிச்சல் அடையச் செய்து வருகிறது.
கருத்து உரிமைக்கு பலத்த அச்சுறுத்தலை திமுக, அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதிமுக, கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விட்டது.
மதிமுகவினருக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அதிமுக கூட்டணிக் கட்சிகள் சட்டசபை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications