'2-ஜி ஸ்பெக்ட்ரம்': அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்-மத்திய அரசு விளக்கம்

தொலைத் தொடர்புத் துறையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது மனுவில், ராசா மீது நடவடிக்கை கோரி பிரதமர் அலுவலகத்துக்கு நான் அனுப்பிய மனு மீது கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை எடுக்க விருப்பமில்லை எனில் அதை தெரிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு 2 ஆண்டுகளாக பதில் தெரிவிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது.
இந்த வழக்கு விசாரணையில் ஏன் இவ்வளவு கால தாமதம் என்பதை அரசு விளக்க வேண்டும். இந்த வழக்கில் ரூ.60,000 கோடி சம்பந்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
சாமியின் இந்த மனு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடுகையில், இந்த 2-ஜி விவகாரம் தொடர்பாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சில அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய நிலையில் மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது சரியா அல்லது தவறா என்று கூற முடியாத சூழல் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன், சிபிஐக்கு உரிய சான்றுகள் கிடைக்க வேண்டும் என்றார்.
அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், சாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications