எம்பிபிஎஸ்: அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கு பதிலளித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுத்த கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனால் சமூக நீதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அவர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந் நிலையில், தமிழக அரசின் சார்பில் அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கிராமப்புற மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த மனு அடுத்த மாதம் 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications