கல்மாடியின் அதிகாரங்கள் முழுமையாக பறிப்பு-புதிய குழு அமைப்பு
டெல்லி: சுரேஷ் கல்மாடி தலைமையிலான காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் முழு அதிகாரங்களும் கிட்டத்தட்ட முழுமையாக பறிக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் பணிகளை மேற்பார்வையிட புதிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பை மத்திய அரசே கைப்பற்றியுள்ளது.
இணை மற்றும் கூடுதல் செயலாளர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவை அமைச்சரவை செயலகம் நியமித்துள்ளது. ஒவ்வொரு அதிகாரிக்கும், ஒரு ஸ்டேடியத்தின் பொறுப்பை ஒப்படைத்துள்லனர். அந்த ஸ்டேடியங்களில் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்குமாறு பணிகளை முடுக்கி விடுவது இவர்களின் பொறுப்பாகும்.
மேலும் இதுதொடர்பாக அவர்கள் நேரடியாக அமைச்சரவை செயலாளரிடம் தொடர்பு வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது கல்மாடிக்கும், காமன்வெல்த் போட்டிக்கும் கிட்டத்தட்ட தொடர்பு அறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நியமித்துள்ள குழு விவரம்:
ஜே.எஸ். தீபக், இணைச் செயலாளர் - கேம்ஸ் வில்லேஜை இவர் பார்த்துக் கொள்வார்.
சுபோத் குமார், கூடுதல் செயலாளர்- அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் இவர் கவனிப்பார்.
ஆர்.சி.மிஸ்ரா - இந்திரா காந்தி ஸ்டேடியம் மற்றும் கட்டுமான பிரச்சினைகளை கவனிப்பார்.
எஸ்.ஆர்.ராவ், கூடுதல் செயலாளர் - ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை கவனிப்பார்.
சசி சேகர் - டெல்லி பல்கலைக்கழக வளாகத்தை பார்த்துக் கொள்வார்.
கோபால்கிருஷ்ணா - தியான்சந்த் ஸ்டேடியம் மற்றும் தியாகராஜ் ஸ்டேடியத்தை கவனித்துக் கொள்வார்.
ரோஹித் நந்தன் - ஆர்.கே.கண்ணா டென்னிஸ் வளாகத்தையும், ஸ்ரீபோர்ட் வளாகத்தை கவனித்துக்கொள்வார்.
அமர்ஜீத் சிங் - யமுனா விளையாட்டு வளாகத்தை பார்த்துக் கொள்வார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் 45 நாட்களே உள்ளன. ஆனால் பெரும்பாலான ஸ்டேடியங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. கட்டுமானப் பணிகள் இன்னும் முடியவில்லை. பெரும் இழுபறியாக உள்ளது. இந்த நிலையில், ஊழல் பிரச்சினைகள் வேறு எழுந்ததால் இந்தியாவின் மானம் கப்பலேறும் அபாயம் எழுந்தது.
இதையடுத்து மத்தியஅரசு தலையிட்டது. முதலில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெபால் ரெட்டி தலைமையில் அமைச்சர் குழுவை அமைத்து, கல்மாடியின் சில அதிகாரங்களை பறித்தது மத்திய அரசு. தற்போது முழுமையாக அவரது அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications