சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: முதல்வரிடம் பாமக கோரிக்கை

சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மணி,
இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சேலத்துக்குக் கொண்டு வர அன்புமணி மிகுந்த சிரமப்பட்டார். அவர்தான் இந்த திட்டத்தை கொண்டுவந்தார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல் இங்கும் மருத்துவமனை அமைய வேண்டும் என்று அன்புமணி முயற்சித்தார். அது இப்போது நிறைவேறிவிட்டது.
1996ல் நான் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது முதல்வர் கருணாநிதியிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாகவும் கோரிக்கை வைத்தேன்.
இப்போது இரண்டு கோரிக்கைகளை அவரிடம் முன் வைக்கிறேன்.
ஒன்று, காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு செல்லும் உபரி நீர் கடலில் கலந்து விடுகிறது. இதை சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு குடிநீராகும் திட்டத்திற்கு வழி வகுக்கவேண்டும்.
இரண்டாவது, சேலம் மாவட்டத்தின் பரப்பளவையும், நிர்வாக வேலை பளுவையும் கருத்தில்கொண்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் இன்னும் இந்த மாவட்டம் வளர்ச்சி அடையும். எனவே, சேலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றார்.
மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் மறுப்பு:
பின்னர் பேசிய விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 'இந்த மருத்துவமனை அன்புமணியில் முயற்சியால் வரவில்லை. எங்களின் முயற்சியால்தான் அமைந்தது என்றார்.












Click it and Unblock the Notifications