தலைமை தகவல் ஆணையர் தேர்வு-கருணாநிதியை சந்திக்கும் ஜெ.-ஓ.பி.யை அனுப்புகிறார்
சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா பங்கேற்கவில்லை. மாறாக துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பி வைக்கிறார்.
தலைமை தகவல் ஆணையரை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்பது விதியாகும். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியின்போது தற்போதைய தகவல் ஆணையர் ராமகிருஷ்ணனை முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகனும் சேர்ந்துதான் தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஆணையரை தேர்வு செய்ய இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஒரு அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்.
எனவே இன்றைய கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், கருணாநிதியும், ஜெயலலிதாவும், சட்டசபைக் கூட்டங்களைத் தவிர வேறு எங்குமே சந்தித்துக் கொண்டதில்லை என்பதால் இன்று இரு துருவங்களும் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏகமாக இருந்தது.
ஆனால் அது நடைபெறாது என்பது தற்போது தெரிந்து விட்டது. காரணம், ஜெயலலிதா இன்று கூட்டத்திற்குப் போகவில்லை, மாறாக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பி வைக்கிறார்.
இதன் மூலம் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு பறிபோய் விட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications