அரசியல்வாதிகள் வளைத்து போட்டுள்ள நிலத்தை கைப்பற்றுங்கள்: ராமதாஸ்
திருவள்ளூர்: ஸ்ரீபெரும்புதூரில் அரசியல்வாதிகளும், வெளிநாட்டு தொழிற்சாலை நிறுவனத்தினரும் வளைத்து போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி அங்கு கிரீன் பீல்டு விமான நிலையத்தை அமைக்கலாம். அதை விட்டுவிட்டு விவசாய நிலங்களை கைப்பற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையம் அமைக்கும் பணிக்காக 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதி்ல் பேசிய ராமதாஸ், விமான நிலைய விரிவாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலம், தனியாருக்கு தொழிற்சாலை அமைக்க நிலத்தை தாரை வார்ப்பது போன்ற பிரச்சனைகளில் எதிர்ப்பு தெரிவித்து அதிக அளவில் போராடியவன் நான்.
இதற்காக கோவை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளேன்.
விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வரும் நிலையில், இருக்கும் விவசாய நிலங்களையும் அரசே அபகரித்தால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும்.
மகாராஷ்டிரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக 10,000 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சித்தபோது மக்கள் பெருமளவில் போராடினார்கள். ஒரு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் வரை கொடுக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும் மக்கள் அதை எதிர்த்தார்கள்.
இறுதியாக அந்த நிலத்தை எடுக்கலாமா வேண்டாமா என மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதில் மக்களின் எதிர்ப்பை தெரிந்து கொண்ட அரசு அந்தத் திட்டத்தை கைவிட்டது அந்த மாநில அரசு.
அதேபோல் கிரீன்பீல்டு விமான நிலையம் அமையவுள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசு வாக்கெடுப்பு நடத்தி முறையாக மக்களின் அனுமதி பெற்று இந்த நிலத்தை எடுக்கலாம்.
வளர்ச்சித் திட்டங்களை வரவேண்டாம் என கூறி நாட்டின் முன்னேற்றத்துக்கு நான் முட்டுக்கட்டை போடவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலேயே அரசியல்வாதிகளும், வெளிநாட்டு தொழிற்சாலை நிறுவனத்தினரும் வளைத்து போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விமான நிலையப் பணியை தொடங்குங்கள் எனக் கூறுகிறேன்.
அல்லது சென்னைக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள அலமாதி பழைய விமான நிலையத்தை புதுப்பிக்கலாம் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications