10 அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி: நெல்லையில் பணி துவங்கியது
நெல்லை: தமிழகத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் இக்கருவியை பொருத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை வசதிகள் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நோய்களை கண்டறிய எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் பிலிம் தட்டுபாடு காரணமாக எக்ஸ்ரே எடுப்பதில் காலதாமதம் ஆகிறது. இதனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திட்டமிட்டது. கடந்த 2008-09-ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் 10 அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தலா ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக துரிதமாக நடந்து வருகிறது. மருத்துவமனை கீழ்தளத்தில் அறை எண் 32ல் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த அறை நவீன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் துல்லியமாக நோய்களின் தன்மையை கண்டறிய முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications