சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்: பெண் எம்.பிக்களுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை: நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்பிக்களின் கூட்டத்தில் பெண் எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் தனித்தனியாக இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இதைப் பார்த்ததும் கருணாநிதி, கொஞ்சம் பேர்தான் இருக்கிறீர்கள் மொத்தமாக இருந்திருக்கலாமே என்று கூறிவிட்டு, சேர்ந்து உட்காராவிட்டாலும் பரவாயி்ல்லை, சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள் என்றார்.
இதையடுத்து பெண் எம்பிக்களும் திமுக மகளிர் அணியினரும் சேர்ந்து அமர்ந்தனர்.
அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு:
காலையில் எம்பிக்கள் கூட்டத்தை முடித்துவிட்டு மாலையில் தமிழக அமைச்சரவையின் 47வது கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். இதில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆய்வு நடத்தினார்.
கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர, தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அதில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் விரிவாக ஆய்வு நடத்தினார். 27, 28ம் தேதிகளில் திருச்சியில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடக்கிறது. அதில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்துப் பேசிய முதலவர், மாநிலம் முழுவதும் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளின் வேகம் ஆகியவை குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.
சிறு விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவது குறித்தும், தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவை எவ்வாறெல்லாம் சிறப்பாக நடத்துவது என்றும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications