குறைந்த காற்றழுத்த நிலை: தமிழகத்தில் கன மழை பெய்யும்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் விட்டு விட்டு தொடர்ச்சியாக பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழைக்காலம் இன்னும் சென்னையில் தொடங்காவிட்டாலும் கூட மழைக்காலத்தில் இருப்பது போல வானம் எப்போதும் இருண்டு காணப்படுகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக்கடலின் மத்திய மேற்கு பகுதியிலும், தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக காரைக்கால் மற்றும் நாகப்பட்டிணத்தில் 5 செ.மீ., சோழவரத்தில் 4 செ.மீ., பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், தரங்கம்பாடி, தேவாரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதனால், மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது புதன்கிழமையன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும், வட மாவட்டங்களில் கனமழை இருக்கும். அனேக இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.
தென்மாவட்டங்களில் குறைந்த அளவில் மழை பெய்யலாம். சென்னையைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications