ஜாதிவாரி கணக்கெடுப்பு: இன்னும் முடிவெடுக்கலையே: இது மத்திய அரசின் 'லேட்டஸ்ட்' பல்டி!
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு 'பல்டி' அடித்துள்ளது.
இந்த விஷயத்தில் மாறி மாறிப் பேசி வரும் மத்திய அரசின் 'லேட்டஸ்ட் பல்டி' இதுவாகும்.
ஜாதிவாரி இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்களில் முக்கியமானவரான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் ராஜ்யசபாவில் கூறுகையில்,
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துவிட்டது. இந்த பரிந்துரை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் அமைச்சரவைதான் இறுதி முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.
இப்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்தே ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று முக்கிய கட்சிகள் கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை இந்த விஷயத்தை ஜவ்வாக இழுத்தடித்து, பின்னர் ஏதாவது காரணம் காட்டி இந்த விவகாரத்தை ஊத்தி மூடலாம் என்று காங்கிரஸ் அமைச்சர்களில் சிலர், சில எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications