கூடன்குளம் அணுமின் நிலைய என்ஜினியரின் வங்கிக் கணக்கில் நூதன முறையில் மோசடி
தூத்துக்குடி: கூடன்குளம் அணு மின் நிலைய என்ஜினியரின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை எடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கூடன்குளம் அணு மின் நிலையத்தில் தனியார் கட்டுமான தரக்கட்டுபாட்டு என்ஜினியராக பணியாற்றி வருபவர் ரமேஷ் என்பவரின் மகன் சபரிஸ். இவரது ஈ-மெயில் முகவரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த மெயிலில் அவரின் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டையும், யூசர்நேமையும் அனுப்பும்படியும், கணக்கில் பணம் செலுத்துவதற்காக கேட்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே அதி்ல் கேட்டிருந்தபடி சபரிஸ் பாஸ்வேர்டையும், யூசர்நேமையும் அனுப்பியுள்ளார். மறுநாள் அவரது வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது அதிலிருந்து ரூ.72 ஆயிரத்து 334 எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று தான் பணம் எடுக்காமலேயே கணக்கில் குறைந்துள்ளது குறித்தும், 2 நாட்களுக்கு முன்பு தனக்கு வந்த ஈ-மெயில் குறித்தும் விபரம் கேட்டார். அதற்கு அவர்கள் அந்த ஈ-மெயில் மூலம் தகவல் சேகரித்தவர்கள் தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து சபரிஸ் கூடன்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications