பா.ம.க. பிரமுகர் கொலை: மதுரை கோர்ட்டில் 6 பேர் சரண்
கல்லிடைகுறிச்சி: பாமக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.
நெலலை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் பாண்டியன். பா.ம.க. பிரமுகரான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சித்ரபுத்ரன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதில் சித்ரபுத்திரனின் மகன்கள் சுப்பிரமணியன், பெருமாள், பாபநாசம் ஆகியோரும் பெருமாள் பாண்டியனின் உறவினர்கள் சுப்பையா, சின்னதம்பி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி அம்பை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெருமாள் பாண்டியனை சித்ரபுத்ரன், அவரது மகன்கள், மருமகன்கள் மற்றும் கூலிபடையினர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெருமாள் பாண்டியன் கொலை தொடர்பாக சித்ரபுத்ரன், அவரது மகன்கள் வெள்ளைபாண்டி, பரமசிவன், காளிமுத்து, முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சித்ரபுத்ரன், குமார்சக்தி, இசையழகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 10 பேரையும் போலீசார் வலை வீசித் தேடி வந்த நிலையில் அவர்களில் பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சித்ரபுத்ரனின் மகன்கள் பரமசிவன், காளிமுத்து, முத்து கிருஷ்ணன், மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, இசக்கிமுத்து, ஆலங்குளம் மறந்தையைச் சேர்ந்த சுருட்டை முருகன் ஆகிய 6 பேரும் மதுரை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் 6 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications