ரூ. 2 கோடி பரிசு-ஜெ. வழக்கு: இன்னொரு நீதிபதியும் விசாரிக்க மறுப்பு

1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு பிறந்த நாள் பரிசாக ரூ.2 கோடி வந்தது. இந்த காசோலைகளை அரசு கணக்கில் வரவு வைக்காமல் தனது சொந்தக் கணக்கில் போட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக 1996ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் அப்போதைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
10 ஆண்டு காலத்துக்குப் பின் 2006ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், என் மீதான பிறந்தநாள் பரிசு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனவே சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சி.டி.செல்வம் முன் சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி தாக்கல் செய்த மனுவில்,
ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், இப்போதைய நீதிபதி சி.டி. செல்வம் கூடுதல் அரசு வழக்கறிஞராக இருந்து ஆஜராகியுள்ளார். எனவே, நீதிபதி செல்வம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது. அவருக்கு பதிலாக வேறொரு நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதி சி.டி. செல்வம் ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கை நானும் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி வேறொரு நீதிபதி விசாரிக்க வசதியாக அது தொடர்பான பரிந்துரையை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பாலுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மதிவாணனுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரக்கு வந்தபோது இதை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி மதிவாணனும் கூறிவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் வேறு நீதிபதிக்கு மாற்றப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications