ரம்ஜான்: சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 9ம் தேதி மற்றும் 11ம் தேதி சிறப்பு ரயில் (எண் 0617) இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு செப்டம்பர் 10ம் தேதி மற்றும் 12ம் தேதி சிறப்பு ரயில் (எண் 0618) பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
அதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஈரோடு, திண்டுக்கல் வழியாக செப்டம்பர் 8ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 0603) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செப்டம்பர் 9ம் தேதி மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 0604) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
திருநெல்வேலிக்கு...
சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு 8ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 0601) இயக்கப்படும்து. இந்த ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 9ம் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரயில் (0602) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
நாகர்கோவில்-எழும்பூர்:
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 12ம் தேதி மாலை 5 மணிக்கு அதி விரைவு சிறப்பு ரயில் (எண் 0606) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 13ம் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 0605) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications