+1-ல் பெயிலாகிய மாணவனை +2 -விற்கு அனுப்ப ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: பிளஸ் ஒன் படிப்பில் பெயிலான மாணவனை பிளஸ்டூவுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காரைக்காலைச் சேர்ந்த கலைராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
எனது மகன் குரு அரவிந்த் காரைக்காலில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு +1 படித்தான். தேர்ச்சி பட்டியலில் அவன் பெயர் இல்லை. அவன் தேர்வில் தோல்வி அடைந்ததாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் மற்ற மாணவர்களை +2 விற்கு அனுப்பினர். இதனால் என் மகன் மனம் உடைந்து போனான். அவனுக்கு பள்ளிக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம் உள்ளது. அவனின் கடந்த ஆண்டு வருகைப் பதிவின் சதவிகிதம் 95 ஆகும். எனவே, கல்வியில் ஆர்வமுள்ள அவனை +2-விற்கு அனுப்பினால் அவன் தேர்ச்சி பெற நாங்கள் அவனுக்கு ஊக்கம் அளிப்போம். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் ஒரு மாணவனை தயார் செய்வது என்பது ஒரு நாட்டை தயார் செய்வது போலாகும். ஆகையால், கல்வியில் ஆர்வமுள்ள இந்த மாணவனுக்கு சலுகை அளித்து +2 வகுப்புக்கு இந்த கல்வி ஆண்டிலேயே அனுப்ப வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் (தோல்வி) ஆக்கக் கூடாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications