தமிழகம் முழுவதும் அதிரடி வாகன சோதனை-பலர் சிக்கினர்
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் அதிரடியான வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் லைசென்ஸ் இல்லாதோர், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டாதோர் என பலரும் பிடிபட்டு அபராதம் செலுத்தினர்.
மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களுக்கு உரிய ஆவணங்களையும், வாகனம் ஓட்டுவதற்கான லைசென்சையும் வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும். மேலும், இரவு நேர விபத்துக்களை தவிர்க்க வாகனங்களின் முன்னும், பின்னும் ஒளியை பிரதிபலிக்கும் சிவப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் ராஜாராம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது.
லாரிகள், வேன்கள், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களிலும் சோதனை நடைபெற்றது. வாகனங்களுக்குரிய இன்சூரன்ஸ், உரிமம், ஓட்டுனர் உரிமம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய வாகன சோதனை நேற்று காலை 6 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது.
இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பல சிக்கின. அவற்றை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications