அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தை திமுக கூட்டம் மிஞ்சியாக வேண்டும்-கே.என்.நேரு
திருச்சி: திருச்சியில் அதிமுகவினர் நடத்திய கூட்டத்திற்குத் திரண்ட கூட்டத்தை மிஞ்சும் வகையில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றாக வேண்டும் என மாநில போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சமீபத்தில் திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமான கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தி்முகவும் பொதுக் கூட்டம் போடுகிறது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசவுள்ளார்.
இதுதொடர்பான திமுக தொண்டர்கள் கூட்டம் உப்பிலியாபுரத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு நேரு பேசுகையில்,
திருச்சியில் செப். 8-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் ரூ. 400 கோடிக்கு திட்டங்களை முதல்வர் கருணாநிதி தொடக்கிவைக்கவுள்ளார்.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து 3,895 வாகனங்களில் 96,000 பேர் கலந்து கொண்டதாக காவல் துறையினர் புள்ளிவிவரம் கொடுத்துள்ளனர்.
அதிமுக கூட்டத்தை விஞ்சும் வகையில், திருச்சியில் செப். 8-ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தை நடத்திக் காட்ட வேண்டும்.
இதற்காக, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்.
கோவை, திருச்சி ஆர்ப்பாட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா குறிப்பிட்டது, தனது கட்சிக்காரர்களை தக்கவைத்துக் கொள்ளும் உத்தியாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது என்றார் நேரு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications