புலிகள் மீது தடை தேவையா?-பதில் சொல்ல ஆஜராகாத தலைவர்கள்!

பாஜக தரப்பிலிருந்து ஒருவர் மட்டும் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது கடந்த 20 ஆண்டுகளாக தடை உள்ளது. இந்தத் தடை தொடர வேண்டுமா... புலிகள் அமைப்பு பற்றிய இந்தியாவின் வருங்கால நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க இந்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாலை 3.30 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
விடுதலைப் புலிகள் விஷயத்தில் மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கான இந்தப் பொது விசாரணை, டெல்லி உயர்நீதிமன்றம் எண் 2 ல் நடந்தது.
விடுதலைப் புலிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நடந்த இந்தப் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை.
தமிழகத்திலிருந்து பாஜகவைச் சார்ந்த ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். அவர் தனது கருத்தை கூறும் போது, "விடுதலைப்புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டு விட்டதாய் இலங்கை அரசு கூறுகிறது. இதனால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இல்லாத ஒரு இயக்கத்தை நினைத்து எதற்காக அச்சப்பட வேண்டும்?" என்று வாதாடினார்.
இந்த விசாரணையில் ஒருவரை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளாததால், அடுத்த மாதம் 21ம் தேதி சென்னையிலோ அல்லது டெல்லியிலோ இந்த விசாரணையை மீண்டும் நடத்த நீதிபதி முடிவு செய்துள்ளார்.
விசாரணை சென்னையில் நடக்கும்போதாவது மற்றவர்கள் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications