ஒரே பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியைகள்-உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: ஒரே அரசுப் பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியைகள் பணிக்கு வந்ததால் ஏற்பட்டது தொடர்பான வழக்கில் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த தலைமை ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலூர் கொசபேட்டையில் உள்ள ஈ.வெ.ரா. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் விஜயகுமாரி. இவரை திருவண்ணாமலை மாவட்டம் காரப்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். அதேபோல அங்கு பணியாற்றி வந்த காயத்ரி தேவி, கொசப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இதை எதிர்த்து விஜயக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார். இந்த நிலையில்,விஜயக்குமாரியும், காயத்ரி தேவியும் பணிக்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் அறை மூடப்பட்டது. இருப்பினும் அறைக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் குதித்தார் விஜயக்குமாரி.
இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில், விஜயக்குமாரிக்கு ஆதரவாக போடப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் தனியாக மனுத் தாக்கல் செய்த விஜயக்குமாரி, இதில் காயத்ரி தேவியையும் சேர்க்கக் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரி பரந்தாமன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காயத்ரிக்கு உத்தரவிட்டு 2 வாரகால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications