மாவோயிஸ்ட் தலைவர்கள் மீது செக்ஸ் புகார் கூறிய பெண் நக்சலைட் சரண்
மிதினாப்பூர் : மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பெண் நக்சலைட்களை செக்ஸ் அடிமைகளாகப் பயன்படுத்தி வருவதாக புகார் கூறிய பெண் நக்சலைட் தலைவர் உமா என்கிற ஷோபா மண்டி இன்று சரணடைந்தார்.
மேற்கு வங்கத்தை ஆட்டிப்படைத்து வரும் மாவோயிஸ்ட் நக்சலைட்களை பாதுகாப்புப் படையினர் வேட்டையாடி வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஷோபா என்கிற உமா என்ற நக்சலைட் தலைவி பரபரப்பு புகார்களை கூறி பேட்டி அளித்திருந்தார். மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பெண் நக்சலைட்களை செக்ஸ் அடிமைகள் போல நடத்தி வருகின்றனர். இஷ்டத்திற்கு அவர்களை அனுபவித்து வருகின்றனர். உடன்படாதவர்களை சித்திரவதை செய்கின்றனர். ஒரு நக்சலைட் தலைவரின் மனைவி கிஷன்ஜி வசம் உள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உமா போலீஸில் சரணடைந்துள்ளார். இவர் கார்கிராம் பகுதி கமாண்டராக இருந்தவர் ஆவார். நேற்று இரவு இவர் மேற்கு மிதினாப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு தனது சீருடையில் வந்தார். எஸ்.பி. மனோஜ் வர்மாவை சந்தித்து சரணடைவதாக தெரிவித்தார். பின்னர் ரூ. 55 ஆயிரத்து 550 ரூபாயை அவரிடம் ஒப்படைத்தார்.
இவருக்கு ஞானேஸ்வரி ரயில் விபத்து சதியில் தொடர்பு உள்ளது. லால்கரில் நடந்த தாக்குதல்களிலும் இவருக்குத் தொடர்புள்ளது. சரணடைந்த உமாவை பாதுகாப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். அவரது பெற்றோருக்கும் தகவல்தரப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது மகளைப் பார்த்தனர்.
இதுகுறித்து எஸ்.பி. மனோஜ் வர்மா கூறுகையில், சரண் அடைந்த ஷோபா மண்டிக்கு மறுவாழ்வுத்துறை மூலம் உதவிகள் செய்ய எழுதி இருக்கிறோம். அவர் என்ன தொழில் தொடங்க விரும்புகிறாரோ அதை செய்து கொடுப்போம் என்றார்.
போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய பெண் நக்சல் தலைவி இந்த ஷோபா என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications