அரியலூர் காங்கிரஸ் எம்எல்ஏ தம்பியின் இன்னொரு மகனும் கடத்தல்
அரியலூர்: அரியலூர் காங்கிரஸ் எம்எல்ஏ தம்பியின் இரண்டாவது மகன் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட நிலையில், அவரது மூத்த மகனும் கடத்தப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. அமரமூர்த்தியின் தம்பி பழனிச்சாமி. இவரது மகன் தர்மதுரை (14) 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் தர்மதுரை கடத்தப்பட்டார்.
போலீசார் விசாரணை நடத்தி தர்மதுரையை மீட்டனர். அமரமூர்த்தியிடம் கார் டிரைவராக இருந்த மணிகண்டன் (25) தான் தர்மதுரையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார்.
அதே நேரத்தில் கடத்தலில் மணிகண்டனுக்கு உதவிய மதார்ஷா என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் ஈரோடு அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் பழனிச்சாமியின் மூத்த மகன் கெளசிக்கை காணவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தர்மதுரையை கடத்திய மணிகண்டன்தான், கெளசிக்கையும் கடத்தியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேக்கினறனர். இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நரிக்குறவரின் 3 வயது குழந்தை கடத்தல்:
இந் நிலையில் ஜோலார்பேட்டை அருகே பெற்றோருடன் தூங்கிய 3 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளான்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் நரிக் குறவர்கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் காந்தாராவ்-அமுதா தம்பதியின் மகன் அஜய் (3).
தெருவில் காந்தாராவ், அமுதாவுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை. அவனை யாரோ கடத்தி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
வாணியம்பாடி பகுதியில் சில மாதங்களுக்கு முன் பெற்றோருடன் சாலையிலும் கோவிலிலும் தூங்கிய இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டனர். அவர்கள் இதுவரை மீட்கபடவில்லை.
இந்நிலையில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளான்.












Click it and Unblock the Notifications