கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்: திமுக வலியுறுத்தல்
டெல்லி: கச்சச்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.
இன்று மக்களவையில் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு,
கச்சத் தீவு மீதான தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு இலங்கையுடனான உடன்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக கடலோர காவல்படையிரின் ரோந்து அதிகரிக்கப்பட வேண்டும்.
பிரச்சனைகளை உடனுக்குடன் பேசித் தீர்க்க மத்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழக மீனவர்கள் கொண்ட ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
கச்சச்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கச்சத்தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றார்.
விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்துமகா கடல் பகுதியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடும் மீனவர்களின் நலனும் பாதுகாக்கப்படும்.
தற்போது இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசுவார். வரும் அக்டோபர் மாதம் நான் இலங்கை செல்ல இருக்கிறேன். அப்போது இலங்கை அரசுடன் தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications