அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்ல பிரதமர் தடை
டெல்லி: மத்திய, மாநில அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தடை விதித்துள்ளார்.
மத்திய, மாநில அமைச்சர்கள் சமீபகாலமாக அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சரத்பவார், ஆனந்த சர்மா ஆகியோர் அடிக்கடி வெளிநாடு செல்வதாகத் தெரிகிறது.
முன்பு பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது அடிக்கடி வெளிநாடு செல்வதாக அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. பிரதமர் எப்போதாவதுதான் நாட்டில் இருக்கிறார் என்றும் கிண்டலடித்தன எதிர்க்கட்சிகள். தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் இஷ்டத்திற்கு வெளிநாடுகளுக்குப் போவது அதிகரித்து வருகிறது.
அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த வெளிநாட்டு மோகத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். இதையடுத்து பிரதமர் உத்தரவின்படி இனி மத்திய, மாநில அமைச்சர்கள் வெளிநாடு செல்ல புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய, மாநில அமைச்சர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பயணம் குறித்த முழு விவரங்களையும் பிரதமர் அலுவலகத்திடம் முன் கூட்டியே கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும்.
அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது அவர்கள் எப்பொழுது திரும்பி வருகின்றனர் என்பதைக் கண்காணிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி அமைச்சர்கள் தாங்கள் வெளிநாட்டுக்கு போகும் பொழுதெல்லாம் இதற்கு முன்பு எத்தனை தடவை வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளனர் என்ற தகவலையும் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எந்த அமைச்சராவது குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு அடிக்கடி சென்றால் அது பற்றியும் தனக்கு அறிவிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் இந்த உத்தரவு அமைச்சரவை செயலகம் மூலம் அனைத்து அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications