சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்-கூறுகிறார் வாசன்
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசும் கப்பல் துறையும் உறுதியுடன் உள்ளன என்றும், தமிழக மக்களின் கனவுத் திட்டமான இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்றும் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சேது சமுத்திரக் திட்டம் தமிழக மக்களின் கனவுத் திட்டம். இந்தத் திட்டத்தால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளமும் பெருகும்.
இந்த திட்டம் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்வு கிடைத்ததும், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசும் கப்பல் துறையும் இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதில் உறுதியுடன் உள்ளன.
எனவே, தமிழக மக்களின் கனவுத்திட்டமான சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 12 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கும் திட்டம் ரூ. 1,530 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 7,400 குடிசைகள் அகற்றப்படுகின்றன.
அந்த குடிசைகளில் வாழும் மக்களுக்கு மாற்று இடம் தருவதற்கான பணிகளை தமிழக குடிசை மாற்று வாரியம் செய்து வருகிறது. பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி அவர்களை குடியமர்த்துதல் போன்ற பணிகள் முடிவடைந்ததும் இத்திட்டப் பணிகள் துவங்கும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications