விப்ரோவின் முக்கியப் பொறுப்பில் அஜீம் பிரேம்ஜி மகன்!

விப்ரோவின் முக்கியப் பொறுப்புகளில் தனது மகனை அமர வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என பல முறை அஜீம் பிரேம்ஜி கூறிவந்தார். இந்த நிலையில் திடீரென்று ரிஷத் சிஎஸ்ஓ பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது கார்ப்பரேட் வட்டாரத்தை புருவம் உயர வைத்துள்ளது.
34 வயதான ரிஷத் பிரேம்ஜி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்தவர். விப்ரோ நிறுவனத்தின் 32 பேர் கொண்ட உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இப்போது அவருக்கு மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு விப்ரோவில் இணைந்த ரிஷத், சிட்டி டெக்னாலஜீஸ் சர்வீஸஸ் நிறுவனம் மற்றும் கல்லாகர் பைனான்ஸியல் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களை விப்ரோவுடன் இணைத்ததில் பெரும் பங்கு வகித்தார்.
நிறுனவனத்தின் கருவூலப் பொறுப்பை இதற்கு முன் அவர் கவனித்து வந்தார். அத்துடன், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் பேசும் பொறுப்பையும் அவரே கவனித்து வந்தார்.
இப்போது தலைமை செயல்திட்ட அலுவலராக ரிஷத் பதவி உயர்த்தப்பட்டுள்ளது, நிறுவனத்தின் தலைமையில் விரைவில் மாற்றம் வரும் என்பதன் அறிகுறியே என்று விப்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிஷத் தம்பி தாரிக் பிரேம்ஜி தற்போது விப்ரோ பவுண்டேஷனின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் இப்போதைக்கு விப்ரோ டெக்னாலஜீஸுக்கு வரமாட்டார் என்றும், சில காலத்துக்கு விப்ரோ பவுண்டேஸன் மூலம் கல்விப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ரிஷத் நியமனம் குறித்து அஜீம் பிரேம்ஜி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications