அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க கூடாது-சாமி

ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை மற்றும் பல்வேறு தண்டனை பெற்ற கைதிகள் சுமார் 1,400 பேரை தமிழக அரசு விடுதலை செய்தது. அதை எதிர்த்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், தமிழக அரசு விடுவித்த கைதிகளில் பலர் ஆயுள் தண்டனை பெற்று குறைந்த ஆண்டுகளே சிறையில் இருந்துள்ளனர். மேலும் அரசியல்ரீதியாக முக்கிய கொலை வழக்குகளில் தண்டனை பெற்றவர்களும் விடுதலையாகி உள்ளனர். மேலும் ஆளுங்கட்சிக்காரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விடுதலையை ரத்து செய்ய வேண்டும். அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந் நிலையில் சுப்பிரமணிய சாமி இன்று காலை திடீரென உயர் நீதிமன்றத்துக்கு வந்து தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோரது பெஞ்ச் முன் ஆஜரானார்.
கைதிகள் விடுதலை தொடர்பான பொது வழக்கு இங்கு நிலுவையில் உள்ளது. ஆனால், வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தமிழக அரசு 2,000 கைதிகளை விடுவிக்க பட்டியல் தயாரித்து வருவதாக ஒரு நாளிதழில் செய்தி வந்துள்ளது. எனவே, கைதிகள் விடுதலை தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கோரினார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள் வரும் 8ம் தேதி இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகக் கூறினர்.
பின்னர் வெளியே வந்த சாமி நிருபர்களிடம் கூறுகையில், இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் விடுதலையான கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications