காவல் நிலையத்தில் கைதி தற்கொலை-சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 காவலர்கள் கைது
கடலூர்: காவல் நிலையத்தில் கைதி தற்கொலை செய்தது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சக்தி விளாகத்தைச் சேர்ந்தவர் தங்க ராஜ். இவரைக் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் அப்போது சப்- இன்ஸ்பெக்டராக இருந்த சிவஞானம் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றார்.
தங்க ராஜ் காவல் நிலையத்தில் திடீரென்று மரணம் அடைந்தார். அவர் இறப்பில் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியதில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. போலீஸ் அராஜகத்தை எதிர்த்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தங்கராஜ் அப்பாவி என்றும், சப்- இன்ஸ்பெக்டர் வேண்டுமென்றே அவரை அழைத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரை விடுவிக்க ரூ. 15,000 பணம் கேட்டு அதில் ரூ. 5,000 வாங்கியதும் வெளிச்சத்திற்கு வந்தது.
தங்க ராஜை காவல் நிலையத்தில் வைத்து சப்- இன்ஸ்பெக்டரும், காவலர்கள் பொன்னம்பலம், சிவகொழுந்து ஆகியோரும் அடித்துச் சித்ரவதை செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் தான் அவர் விஷம் குடித்துள்ளார்.
இந்த அறிக்கையின் பேரில் கடலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சண்முக நாதன் அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை வரும் 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக காவல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் 3 பேரும் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications