தலைவர் பதவியை சோனியா தியாகம் செய்ய வேண்டும்: பாஜக
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை நேரு, இந்திரா குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கு சோனியா விட்டுத் தர வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
சோனியா நான்காவது முறையாக கட்சித் தலைவராகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் ஜனநாயகரீதியாக செயல்படும் கட்சி என்றால், அதற்குரிய சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் வட்ட, மாவட்ட மற்றும் மாநில தலைவர்களாக இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேல் அந்தப் பதவிக்கு வர முடியாது.
அந்த விதிமுறை தேசிய தலைவர் பதவிக்கும் பொருந்தும் என்று அறிவிக்க வேண்டும். பிரதமர் பதவியை தியாகம் செய்தவர் என்று சோனியாவை காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும், எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், கட்சித் தலைவர் பதவியையும், நேரு, இந்திரா குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கு சோனியா விட்டுத்தர வேண்டும்.
தலைவர் பதவியை சோனியா தியாகம் செய்வாரா?. காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றார் பிரசாத்.
40 தடவை சோனியாவை தலைவர் ஆக்குவோம்-காங்கிரஸ்:
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி, சோனியாவை நான்காவது முறையாக என்ன, கட்சி விரும்பினால் 40 தடவை கூட தலைவர் ஆவார் என்றார்.
காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறுகையில், சோனியாவை தலைவர் ஆக்கியது, காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு. இதுபற்றி பாஜக பேச வேண்டிய தேவையும் இல்லை, அருகதையும் இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications