சென்னையில் லேசான மழை-மதுரை, நெல்லையில் சதம் போட்ட வெயில்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று முதல் லேசான மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. அதேசதமயம், தென் மாவட்டங்களான மதுரை மற்றும் நெல்லையில் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. அங்கு 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சமீப நாட்களாக வானிலை மாறி மாறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து மக்களை குளிர்ச்சிப்படுத்தியது.
ஆனால் தற்போது மறுபடியும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது.
மதுரை மாநகரில்தான் வெயில் கடுமையாக உள்ளது. இன்னொரு கோடை காலம் போல அங்கு அனலாக உள்ளது. நேற்று மதுரையில், 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நெல்லையில் 100 டிகிரிக்கு வெயில் அடித்தது.
திருச்சி, புதுச்சேரியில் 98 டிகிரியும், நாகப்பட்டினம், கடலூரில் 97 டிகிரியும், வேலூர் 95, தூத்துக்குடி 93, சேலம், கன்னியாகுமரியில் 92 டிகிரியும் வெயில் அடித்தது.
சென்னை, கோவையில் நேற்றைய வெயில் அளவு 91 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.
இன்று காலையிலிருந்து சென்னையில் வானம் மேகமூட்டமாக உள்ளது. சில காலையில் லேசான மழை பெய்தது. தற்போது தூறல் போட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகம், புதுவையில் வெள்ளிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மேற்கு நோக்கி மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications