தமிழத்திற்கு சுற்றுலா வந்தவர்களில் மலேசியர்களுக்கு 2வது இடம்-முதலிடத்தில் இலங்கை
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்த மலேசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாகும்.
இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது இலங்கையாகும். கிட்டத்தட்ட 5 லட்சம் இலங்கையர்கள் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்து போயுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் இதுகுறித்துக் கூறுகையில், தமிழகத்திற்கு மலேசியர்கள் அதிக அளவில் வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவர்களின் குடும்ப வேர்கள் இங்குதான் உள்ளன. பூர்வீகம் இங்குதான் உள்ளது. இதுதான் மலேசியர்கள் அதிக அளவில் தமிழகத்திற்கு வர முக்கியக் காரணமாகும்.
குடும்ப விழாக்கள், மத ரீதியான விழாக்கள், மருத்துவ சிகிச்சை, சுற்றுலா என பல காரணங்களுக்காக மலேசியர்கள் பெருமளவில் தமிழகத்திற்கு வருகின்றனர்.
மேலும் சென்னை-கோலாலம்பூர் இடையே தற்போது அதிக அளவில் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்ன. விமானக் கட்டணம் குறைந்துள்ளது. இவையும் கூட அதிக அளவில் தமிழகத்திற்கு மலேசியர்கள் வர ஒரு
காரணமாகும்.
மலேசியாவுக்கு தமிழகத்திலிருந்து தினசரி 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சி, சென்னைக்கு கூடுதலாக ஏர் ஏசியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் அதிகமாகும். அதாவது கிட்டத்தட்ட 20.5 லட்சம் பேர் தமிழகத்திற்கு வந்திருந்தனர். 2வது இடம் டெல்லிக்கும், 3வது இடம் உ.பிக்கும் கிடைத்தது என்றார்.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications