4வது முறையாக காங். தலைவராகி சோனியா சாதனை

நேற்று அவர் நான்காவது முறையாக போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
இதையடுத்து அவரை பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாக சென்று சோனியாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் தனக்கு வாழ்த்து சொல்ல திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியினரிடையே சோனியா பேசுகையில், நாட்டின் ஒவ்வொரு பிரிவினரின் அபிலாஷைகளையும் உணர்வுகளையும் காங்கிரஸ் கட்சி பிரதிபலிக்கிறது. இதை உணர்ந்துள்ள நான் அவர்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
காங்கிரஸ் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை பொருட்படுத்தாமல் மக்களின் நலன் கருதி பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வரும் கட்சி. இதன் கெளரவத்தை தொடர்ந்து நிலை நாட்ட தொண்டர்களுடன் இணைந்து தொடர்ந்து கடுமையாக உழைப்பேன் என்றார்.
அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவு காங்கிரஸார் சோனியாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்கத் திரண்டதால் அவரது வீடு உள்ள பகுதி காங்கிரஸ்காரர்களால் நிரம்பி வழிந்தது.
காங்கிரஸ் வரலாற்றிலேயே நீண்ட காலம் தலைவர் பதவியை வகித்து வருபவர் என்ற பெருமையையும், சாதனையையும் சோனியா படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications