இலவச பம்புசெட் திட்டம்-பயனாளிகள் பட்டியலை 15க்குள் அனுப்ப உத்தரவு
தூத்துக்குடி: விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கும் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே பம்புசெட் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளுக்கு புதிய பம்புசெட் மோட்டார் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதையடுத்து மின்மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணியி்ல் அந்தந்த பகுதி உதவி மின்பொறியாளர்களும், வயர்மேன்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் விவசாயிகளின் பெயர், முகவரி, சிறு குறு விவசாயிகளா என்ற விவரம், நிலத்தின் அளவு, சர்வே எண், நிலம் யாருடைய பெயரில் உள்ளது, ஏற்கனவே உள்ள மோட்டாரின் திறன் உள்ளிட்ட விபரங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் விவசாயியிடம் கையெழுத்து பெறப்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு விவசாயிகள் குறித்த விபரங்கள் கணிணியில் ஏற்றப்படும்.
அத்துடன் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்களையும் இணைத்து செப் 15ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications