நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு: ராமதாஸ் கோரிக்கை
சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னிய சமுதாயம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பேசிய ராமதாஸ், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான அணுகுமுறை வேண்டும். எந்த அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது என்பதை தமிழக அரசும், உயர் நீதமன்றமும் விளக்க வேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும். அந்த அடிப்படையில் வன்னியர்கள் 15 பேரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். ஆனால் தற்போது வன்னியர் இனத்தை சேர்ந்த ஒருவர் தான் நீதிபதியாக இருக்கிறார்.
சாதி ஒழிந்த மாதிரி பேசுகிறார்கள். எங்கே சாதி ஒழிந்தது?. எல்லா இடங்களிலும் சாதி இருக்கிறது. இதை மறுக்க முடியுமா?
எல்லாவற்றிலும் கிரிமிலேயரை பின்பற்றும் போது நீதிபதிகள் நியமனத்தில் கிரிமிலேயர் பின்பற்றக்கூடாதா?. முதல்வரே கொஞ்சம் எங்களுக்காகவும் வாதாடுங்கள்.
நம்முடைய வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணிக்காமல் நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தை தொடங்க வேண்டும். நம்முடைய கோரிக்கையை புரிய வைக்க வேண்டும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications