சபரிமலை ஐயப்பன் கோவிலை வருடம் முழுவதும் திறக்க முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோவிலை வருடம் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்க முடியுமா என்பது குறித்து நிபுணர்களின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் டி.பி.ராதாகிருஷ்ணன், பி.பவதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில்,
அடர்ந்த காட்டுப் பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் மட்டும் ஐயப்பன் கோயில் கருவறை வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. எனவே, ஆண்டுமுழுவதும் கோயிலைத் திறக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
அதேபோல கருவறையில் உள்ள புனிதமான பதினெட்டு படிகளை அகலப்படுத்துவது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கு முன்னர் இதேபோன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த மனுவில், பதினெட்டு படிகளை அகலப்படுத்துவது வாஸ்து மற்றும் மத சடங்குகளுக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதை நேற்று நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.இதுகுறித்து நிபுணர்களின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications