பிரம்மோஸ் ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது
பாலசோர் (ஒரிசா): 290 கிலோமீட்டர் தூரம் போய் தாக்கும் பிரம்மோஸ் அதி நவீன ஏவுகணை இன்று ஏவி பரிசோதிக்கப்பட்டது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், இன்று காலை 11.35 மணியளவில் ஒருங்கிணைந்த ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பிரம்மோஸ்-2 ஏவி சோதிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கான சோதனை இது.
குறிப்பிட்ட இலக்குகளை குறி வைத்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது பிரம்மோஸ். குறிப்பாக, தீவிரவாத முகாம்களை மட்டும் குறி வைத்துத் தாக்கக் கூடிய வகையிலான திறமை படைத்தது. குறிப்பிட்ட இலக்குக்கு மட்டும் பெரும் சேதத்தையும், பிற பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலும் இதன் தாக்குதல் திறன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலியை விட 2.8 மடங்கு வேகமாக செல்லக் கூடிய திறன் படைத்த ஏவுகணை இது. 300 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும்.
நிலம், நீர், ஆகாயம் என மூன்று மார்க்கங்களிலிருந்தும் ஏவக் கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் வான் மற்றும் நீர் மார்க்கங்களில் இது சோதிக்கப்படவுள்ளது என்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications