கலர் டிவி விநியோகம்-திமுகவுக்கு எதிராக காங். கவுன்சிலர்கள் போராட்டம்
அரக்கோணம்: தங்களது வார்டுகளை விட்டு விட்டு திமுகவினரின் வார்டுகளுக்கு மட்டும் கலர் டிவி விநியோகிக்க எடுக்கப்பட்ட நகராட்சியின் முடிவைக் கண்டித்து காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அரக்கோணம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்க 8500 வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்துள்ளன. இவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டபோது காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளை விட்டுவிட்டு மற்ற வார்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
கோபமான காங்கிரஸ் நகர தலைவரும் கவுன்சிலருமான துரைசீனுவாசன் கடந்த 4ந்தேதி அரக்கோணம் வட்டாச்சியர் அலுவலகத்தை மக்களுடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் வர வேண்டிய இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வந்தபின் வழங்குகிறோம் என தாசில்தார் எழுதி தந்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் அதற்கு மாறாக நாளை, இருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதைக்கேட்டு கோபமான நகர காங்கிரஸார் நாளை போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் அரக்கோணம் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications